21 ஆண்டுகால பாகிஸ்தான் சாதனையை முறியடித்தார் பாகர் ஜமான்
Recommended Video

ஒரே நாளில் ஜமான் அதிரடி சாதனைகள்!- வீடியோ
புலவாயோ : பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வரின் 21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் பாகர் ஜமான் .
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் பாகர் ஜமான் நேற்று ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் அற்புதமாக விளையாடி 210 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே சர்வதேச போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் அடிக்கும் முதலாவது இரட்டை சதம் ஆகும்.

இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனத்தின் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளார் பாகர் ஜமான். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் சயீத் அன்வர் 1997 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான குவித்த 194 ரன்கள் சாதனையாக இருந்து வந்தது. சர்வதேச அளவில் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக இரட்டை சதம் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார்.
ஆனால் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை அதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி பாகர் ஜமான் 210 ரன்களை குவித்து அன்வரின் சாதனையை முறியடித்தார். மேலும் சர்வேதேச அளவில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அவர் 156 பந்துகளை சந்தித்து 210 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 24 பௌண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.
இதற்கு முன்னால் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் (2010) - 200*
2. விரேந்தர் சேவாக் (2011) - 219
3. ரோஹித் சர்மா (2013) - 209
4. ரோஹித் சர்மா (2014) - 264
5. கிறிஸ் கெயில் (2015) - 215
6. மார்ட்டின் குப்தில் (2015) - 237*
7. ரோஹித் சர்மா (2017) - 208*
8. பாகர் ஜமான் (2018) - 210*
* - நாட் அவுட்
Story first published: Saturday, July 21, 2018, 16:42 [IST]
Other articles published on Jul 21, 2018


Click it and Unblock the Notifications