Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ZIM vs PAK:57 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே-வெறும் 3 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்

புலோவாயோ : பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிகள் ஜிம்பாப்வே அணி 57 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளரான சுபியான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

zim vs pak zimbabwe vs pakistan sufiyan vs

இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பிரியான் பெண்ணட் 14 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான மருமாணி 16 ரன்கள் சேர்த்தார். இதனை எடுத்து களம் இறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் சிக்கந்தர் ராசா மூன்று ரன்களிலும், டியான் மாயர்ஸ் மூன்று ரன்களிலும், ரயான் ஒரு ரன்னிலும் கிலைவ் ஒன்பது ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்க வீரர்களை நீக்கிவிட்டு, ஜிம்பாப்வே எடுத்த ஸ்கோர் கார்டை பார்த்தால் பழைய லேண்ட்லைன் நம்பர் போல் இருந்தது. குறிப்பாக ஜிம்பாப்வே அணியில் மூன்று வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.

zim vs pak zimbabwe vs pakistan sufiyan vs

இதனால் ஜிம்பாப்வே அணி 12.4 ஓவர்களில் 57 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தனர். இதில் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சுபியான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்பாஸ் அபிரடி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து பாகிஸ்தான அணி 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க வீரராக களம் இறங்கிய உமர் யூசுப் 22 ரன்களும், சையும் அயூப் 36 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி தொடரை வென்றது. மூன்றாவது டி20 போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து வரும் பத்தாம் தேதி பாகிஸ்தான அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Story first published: Tuesday, December 3, 2024, 22:02 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+