ZIM vs SL: 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களில் ஆட்டமிழப்பு.. ஜிம்பாப்வே அபார வெற்றி
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களில் சுருண்டு அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமனில் உள்ளது. சிக்கந்தர் ராசா டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கமில் மிஷாரா, அதிகபட்சமாக 20 ரன்களை மட்டுமே பெற்றார். நுவனிடு பெர்னாண்டோ ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தார், இலங்கை அணி பவர் பிளேவில் 37 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி கேப்டன் சாரித் அசலங்காவை 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

கமிந்து மெண்டிஸ் நான்கு பந்துகளில் ராசாவிடம் விக்கெட்டை இழந்தார். தசுன் ஷனகா இலங்கையின் கடைசி நம்பிக்கையாக இருந்தார், ஆனால் 13வது ஓவரில் 21 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணி தனது கடைசி ஐந்து விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களுக்கு இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ராசா, நான்கு ஓவர்களில் 3/11 என்ற அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பிராட் எவன்ஸ் 2.4 ஓவர்களில் 3/15 கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். பிளெசிங் முசரபானி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் மற்றும் தடிவானஷே மருமணி ஆகியோர் ஜிம்பாப்வேக்கு மெதுவான தொடக்கத்தை அளித்து 20 ரன்களை சேர்த்தனர்.
மருமாணி மற்றும் வில்லியம்ஸ் ஆட்டமிழக்க, 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தனர். எபவர் பிளேயில் ஜிம்பாப்வே அணி 27/3 என்ற ஸ்கோரில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த பென்னட் மற்றும் ரியான் பர்ல் 23 பந்துகளில் 26 ரன்களை சேர்த்து பதற்றத்தைக் குறைத்தனர். பென்னட் 23 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பினுரா பெர்னாண்டோவிடம் ஆட்டமிழந்தார். டோனி முன்யோங்கா 12வது ஓவரில் வெளியேற, ஜிம்பாப்வே 11.2 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்து பாதி அணியை இழந்தது.
பர்ல் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி ஒரு முனையைத் தக்கவைத்தார். பர்ல் 22 பந்துகளில் 20 ரன்களும், முசெகிவா 14 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். துஷ்மந்த சமீரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆனால் அது வீணானது.இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications