Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையை கதறவிட்ட ஜிம்பாப்வே.. வரலாற்று சாதனை.. 95 ரன்னுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை முந்தியது

ராவல்பிண்டி: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முழு நேர ஐசிசி உறுப்பினர் அங்கீகாரம் பெற்ற ஒரு அணிக்கு எதிராக ரன்கள் அடிப்படையில் ஜிம்பாப்வே பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம், இந்த முத்தரப்பு தொடரில் நெட் ரன்-ரேட் அடிப்படையில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி ஜிம்பாப்வே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பம் சற்றுச் சறுக்கலாக அமைந்தாலும், அந்த அணியின் இளம் வீரர் பிரையன் பென்னட் மற்றும் அனுபவ கேப்டன் சிக்கந்தர் ராசா ஆகியோர் அணியை மீட்டெடுத்தனர். பென்னட் 42 பந்துகளில் 49 ரன்களும், சிக்கந்தர் ராசா 32 பந்துகளில் 47 ரன்களும் விளாசினர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக அமைந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைக் குவித்தது.

ZIM vs SL T20 Tri-Series Zimbabwe beat Sri Lanka by 67 Runs Registers Historic Victory

இலங்கையின் பேட்டிங் சரிவு:

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே பதும் நிசங்கா ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே குசல் பெரேரா வெளியேறினார். பவர்-பிளே முடிவில் இலங்கை அணி 29 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கேப்டன் தசுன் ஷனகா மட்டும் தனி ஆளாகப் போராடி 25 பந்துகளில் 34 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்தார். அவரைத் தவிர பானுக ராஜபக்ச (11) மட்டுமே இரட்டை இலக்க ரன்களைத் தொட்டார். இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட் தேர்வு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 95 ரன்களுக்குச் சுருண்டது.

ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மிகச் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிச்சர்ட் இங்காரவா 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிரேம் கிரீமர் மற்றும் டினோடெண்டா மாபோசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. முத்தரப்புத் தொடரில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜிம்பாப்வே, இந்த வெற்றியின் மூலம் வலுவான நிலையில் உள்ளது.

Story first published: Friday, November 21, 2025, 9:07 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+