Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ZIM vs SL: இலங்கையை பந்தாடிய ஜிம்பாப்வே.. குரூப் பியில் முதலிடம்.. ஆஸி.யை வீழ்த்தியது லக் கிடையாது

கொழும்பு: ஐசிசி டி20 உலககோப்பை 2026 போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 179 ரன்கள் இலக்கை 19.3 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நிலையில், தற்போது இலங்கையையும் வென்றுள்ளது.

ஜிம்பாப்வே அணியின் வெற்றியில் பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ரன்களும், சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்களும் குவித்து முக்கியப் பங்காற்றினர். இருவரும் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். போட்டியின் இறுதிக் கட்டத்தில், டோனி முனியோங்கா மற்றும் பென்னட் ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவித்து, அணியின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றினர்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பெத்தும் நிசங்காவின் சிறப்பான அரை சதம் அடித்தார். பவன் ரத்னாயக்கின் அதிரடியான25 பந்துகளில் 44 ரன்கள் விளாடிசனார். இதனால் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வேயைப் பொறுத்தவரை, கிரேம் க்ரீமர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிராட் எவான்ஸ் மற்றும் பிளெஸ்ஸிங் முசாரபானி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி தனது சேஸிங்கை நிதானமாகத் தொடங்கியது. முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்தனர். பவர் பிளேயின் கடைசி மூன்று ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் 35 ரன்கள் குவித்தனர். பென்னட் ஒரு முனையில் உறுதியாக நின்று, தொடக்க ஆட்டத்தில் 69 ரன்கள் சேர்த்தார். ரியான் பர்ல் விரைவான ஆட்டத்தால் வேகம் கூட்ட, கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் பென்னட்டின் அடுத்த 69 ரன் பார்ட்னர்ஷிப் ஜிம்பாப்வேயை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றது. பென்னட் சிறப்பான அரைசதம் பதிவு செய்தார்.

SL vs ZIM

சிக்கந்தர் ராசா இலக்கை எட்டுவதற்கு முன்பே ஆட்டமிழந்தாலும், இறுதி ஓவரில் ஜிம்பாப்வே அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. மகேஷ் தீக்‌ஷனா வீசிய முதல் பந்தையே டோனி முனியோங்கா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து பென்னட்டுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க, பென்னட் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து ஜிம்பாப்வேயின் வெற்றியை உறுதி செய்தார். இந்த கடைசி ஓவர் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தியது.

இது ஜிம்பாப்வே அணிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இதன் மூலம் இப்போட்டித் தொடரின் லீக் சுற்றில் தோல்வியின்றி முதலிடத்தைப் பிடித்தனர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 26 பந்துகளில் அதிரடியாக 45 ரனகள் குவித்த சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார். தற்போது பலமான ஜிம்பாப்வே அணி, சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, February 19, 2026, 18:59 [IST]
Other articles published on Feb 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+