Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை நடுங்க வைத்த ஜிம்பாப்வே.. மீண்டும் ஒரு கடைசி ஓவர் த்ரில்.. நோ பால்-ஆல் மாறிய ஆட்டம்!

பிரிஸ்பேன்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி மீண்டும் ஒருமுறை உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குரூப் பி பிரிவுக்கான இன்றைய போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி பிரிஸ்பேனில் உள்ள காப்பா மைதானத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற ஜிம்பாப்வே அணி, இன்று அதே புத்துணர்ச்சியுடன் பலமான வங்கதேச அணியை எதிர்கொண்டது.

வங்கதேச இன்னிங்ஸ்

வங்கதேச இன்னிங்ஸ்

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் சௌம்யா சர்கார் ஒரு ரன் கூட எடுக்காமல் 2வது பந்திலேயே அவுட்டாகி நடையை கட்டினார். எனினும் மறுமுணையில் தூண் போல நிலைத்து நின்ற மற்றொரு ஓப்பனர் சாண்டோ 55 பந்துகளில் 71 ரன்களை அடித்து அசத்தினார்.

கடின இலக்கு

கடின இலக்கு

மிடில் ஆர்டரில் வந்த சகிப் அல் ஹசன் 23 ரன்கள், ஆஃபிப் ஹுசைன் 29 ரன்களையும் அடித்து ரன்களை உயர்த்தினர். ஆனால் லோயர் ஆர்டர் வீரர்கள் அதிரடி காட்ட விடாமல் ஜிம்பாப்வே பவுலர்கள் கட்டுப்படுத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் 150 ரன்களை குவித்தனர்.

தொடக்கமே சரிவுதான்

தொடக்கமே சரிவுதான்

151 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே சரிவாக தான் இருந்தது. தொடக்க வீரர்கள் விஸ்லே மாதேவெரே 4 ரன்களுக்கும், க்ரைக் எர்வின் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த மில்டன் ஷும்பா ( 8) ரன்களுக்கும், ஷிகந்தர் ராசா (0) என ஏமாற்றினர். இதனால் 69 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே அணி திணறியது.

ஜிம்பாப்வேவின் போராட்டம்

ஜிம்பாப்வேவின் போராட்டம்

ஆனால் அதோடு ஜிம்பாப்வேவின் போராட்டம் நின்றுவிடவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் ஒற்றை ஆளாக போராடினார். சிறப்பாக ஆடிய அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்களை விளாசினார். இவருக்கு சற்று உறுதுணையாக இருந்த ரெஜிஸ் சகாப்வா (15) ரன்களை அடித்தார். இதனால் ஜிம்பாப்வேவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

கடைசி ஓவரில் த்ரில்

கடைசி ஓவரில் த்ரில்

இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் 5 பந்துகளில் 1, W, 4, 6, W, என 11 ரன்கள் தேறிவிட்டன. எனவே கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த பந்து நோ பாலாக போடப்பட்டது. இதனால் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் கூட வெற்றி என இருந்தது. ஆனால் அந்த ஃப்ரீ ஹிட் பந்தில் ஒரு ரன்னை கூட ஜிம்பாப்வே அணியால் எடுக்க முடியாததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றி கண்டது.

Story first published: Sunday, October 30, 2022, 12:49 [IST]
Other articles published on Oct 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+