இது ஒருநாள் போட்டியா ? டி20 போட்டியா? 161 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே.. இந்தியா அபார பந்துவீச்சு
ஹராரே: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு சுருண்டது.
Recommended Video
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தீபக் சாஹருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். மற்றபடி வேறு எந்த வீரர்களும் மாற்றப்படவில்லை.
இன்றைய ஆட்டத்திலும் டாஸ் வென்ற கேஎல் ராகுல் இரக்கமே இல்லாமல் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால், மீண்டும் இந்திய வேகத்தை எதிர்கொள்ளும் தண்டனை ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு கிடைத்தது.

ராகுல் தவறு
இங்கு ஒரு குறையை ராகுல் செய்து விட்டார் என்று தான் தோன்றுகிறது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஒரு மணி நேரம் வரை செயல்படும். அப்போது பேட்டிங்கை தேர்வு செய்தால், நம்முடைய பேட்டிங் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்று தெரிந்திருக்கும். மேலும், பந்த ஸ்விங் ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்ற அனபவம் கிடைத்திருக்கும்.

திணறிய பேட்ஸ்மேன்கள்
சவாலே இல்லாமல் நடைபெறும் இந்தப் போட்டியில், எதாவது ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் ராகுல் எந்த ஒரு விஷப்பரிட்சையும் எடுக்கவில்லை. இதனால் வழக்கம் போல், இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். கடந்த போட்டியில் 5 ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே இழந்தது.

அசத்திய பவுலர்கள்
இன்று கொஞ்சம் பொறுமையாக ஆட முற்பட்டு 12 ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் வித்தியாசம். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அபாரமாக பந்தவீச, சுழற்பந்துவீச்சாளர்களான அக்சர், குல்தீப், தீபக் ஹூடா ஆகியோரும் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் கட்டிப் போட்டனர்.

161 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
நடுவரிசையில் ஜிம்பாப்வே அணியின் வில்லியம்ஸ் மட்டும் பொறுப்பாக விளையாடி 42 ரன்கள் அடித்தார். அவருக்கு பக்க பலமாக ரியான் 39 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், ஜிம்பாப்வே அணி இம்முறை 38.1வது ஓவரிலேயே 161 ரன்களுக்கு சுருண்டது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுளை வீழ்த்த எஞ்சிய அனைவரும் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications