புது ஷூ வாங்கக் கூட.. கலங்கிய ஜிம்பாப்வே வீரர்.. உதவிக் கரம் நீட்டிய "Puma" - நெகிழ்ச்சி ட்வீட்
ஜிம்பாப்வே: இந்தியா, இங்கிலாந்து போன்ற பணக்கார கிரிக்கெட் முகங்களைத் தானே நாம் பார்த்திருக்கிறோம். அதன் இன்னொரு முகத்தை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
பிசிசிஐ.. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம். வீரர்களுக்கு லட்சங்களில், கோடிகளில் சம்பளம். அதற்கேற்ப அதிகமான போட்டிகள், விளம்பரங்கள் என்று பல ஆயிரம் கோடிகளை உள்ளடக்கிய பிஸ்னஸ். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வாரியங்கள் இந்தியா அளவுக்கு இல்லை என்றாலும், டாப் கிரேட் அந்தஸ்துள்ளவை.
இதில், பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற ஆவரேஜ் ஒர்த் வாரியங்களும் இருக்கின்றன. அதேசமயம், கென்யா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 'புவர்' ரேட்டட் வாரியங்களும் இருக்கின்றன. இந்த அணிகளில் விளையாடும் வீரர்கள் தொழில் முறை வீரர்கள் அல்ல. They are not Professional Cricketers. இது அவர்களின் பார்ட் டைம் ஜாப் தான்.

ஸ்பான்ஸர்
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம் வைரல் ஆனது. ஜிம்பாப்வே கிரிக்கெட் நிலைமையின் மோசமான முகத்தை காட்டும் விதமாக, அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிளேயர்ஸ் ஷூக்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த படத்தை பதிவிட்டு கேப்ஷனில், "எங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா ? அப்படி நடந்தால் நாங்கள் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் தொடருக்கு பின்பு எங்கள் ஷூவை பசை வைத்து ஒட்டவேண்டிய அவசியம் இருக்காது" என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு
அவரின் உருக்கமான இந்த பதிவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரிப்ளை செய்துள்ளனர். அதில், பலரும் தாங்கள் ஷூ வாங்கித் தருகிறோம் என்று பதிவிட்டனர். சிலர், 'உங்கள் காலணி சைஸ் அனுப்புங்கள், ஷூ வாங்கி அனுப்புகிறேன்' என்று பதிவிட, ட்விட்டர் நெகிழ்ச்சி களமானது.

நாங்க இருக்கோம்
எனினும், ரியானின் இந்த டீவீட்டை கண்ட உலகின் முன்னணி விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான Puma உதவிக்கரம் நீட்டியுள்ளது. ரியான் பர்ல் பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள அந்நிறுவனம், "பசையை ஓரம் வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது, நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

யுவராஜ் சிங்
கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து தனக்கு கிடைத்த பேராதரவிற்கு பின்பு ட்வீட் செய்துள்ள ரியான் பர்ல் "நான் Puma நிறுவனத்துடன் இணைகிறேன் என்பதை பெருமையாக அறிவிக்கிறேன். இதற்கு காரணம் ரசிகர்களான நீங்கள், எனக்கு கடந்த 24 மணிநேரத்தில் அளித்த ஆதரவு தான்,. உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். ரியானின் டிவீட்க்கு பிறகு Puma அளித்த ஆதரவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications