For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். வீழ்த்தியது எப்படி? பாண்டிங் சொன்ன வார்த்தை.. கேப்டனுடன் போட்ட சவால் - சிக்கந்தர் ராசா பேச்சு

பெர்த் : டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான அணி பேட்டிங் செய்யும்போது வலுவான நிலையில் இருந்தது. ஆனால் சிக்கந்தர் ராசா தனது பந்துவீச்சின் மூலம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாவே அணியை வெற்றி பெற வைத்தார்.

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த சிக்கந்தராசா தனது 16 வது வயதில் ஜிம்பாவே குடியேறியது குறிப்பிடத்தக்கது.

வார்த்தை வரவில்லை

வார்த்தை வரவில்லை

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற சிக்கந்தர் ராசா பேசுகையில், மகிழ்ச்சியில் எனக்கு வாயில் வார்த்தை வரவில்லை.போட்டியில் வென்ற பிறகு உற்சாகத்தில் கத்தியதால் என் தொண்டையே வரண்டு விட்டது. நான் எங்கள் அணி வீரர்களின் நினைத்து இப்போது எவ்வளவு பெருமையாக இருக்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை.

சவால் போட்டோம்

சவால் போட்டோம்

எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் செயல்பட்ட விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது.நாங்கள் இந்த போட்டியில் வெல்வோம் என நம்பிக் கொண்டிருந்தோம். எங்களுடைய செயல்பாடு குறித்து சொல்ல வார்த்தை வரவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் வரும்போது கேப்டன் எர்வினும் நானும் ஒரு சவால் போட்டுக் கொண்டோம்.

3 வாட்ச் வேண்டும்

3 வாட்ச் வேண்டும்

அதில் டி20 உலக கோப்பை போட்டிகளில், நீ ஆட்ட நாயகன் விருதை வென்றாய் என்றால் உனக்கு நான் நீ கேட்கும் கைக்கடிகாரங்களை வாங்கி தருகிறேன். அதேபோல் நான் ஆட்டநாயகன் விருது பெற்றால் நீ எனக்கு வாட்ச் வாங்கி தர வேண்டும் என அவரிடம் சவால் போட்டு இருந்தேன். தற்போது நான் அவருக்கு நினைவு கூற விரும்புகிறேன் .அவர் எனக்கு மூன்று வாட்ச்கள் வாங்கித் தர வேண்டும்.

பாண்டிங்கிற்கு நன்றி

பாண்டிங்கிற்கு நன்றி

நான் போட்டிக்காக எப்போதும் உத்வேகத்துடன் தயாராகிக் கொண்டிருப்பேன். இன்று காலை எனக்கு ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது.அதில் என்னை பற்றி ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசினார். அதை பார்த்தவுடன் என்னுடைய உத்வேகம் மேலும் அதிகரித்து விட்டது. எனக்கு உற்சாகம் அளித்த ரிக்கி பாண்டிங்கிற்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் எஞ்சிய போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெற்றி உங்களுடையது.

Story first published: Friday, October 28, 2022, 12:54 [IST]
Other articles published on Oct 28, 2022
English summary
Zimbabwe star Player sikandar raza on beating pakistan in t20 world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+