Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Photos : நீச்சல் குளத்தின் நடுவில் ஒரு கியூட்டான குட்டி சுறா.. மனதை கொள்ளை கொண்ட ஸிவா தோனி!

Recommended Video

Watch Video : MS Dhoni Playing With Ziva in The Pool

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி, தன் குடும்பத்தினருடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் தன் சுட்டிப் பெண் ஸிவாவுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தோனி. அந்த புகைப்படங்களில் மிகவும் அழகான குட்டி சுறா உடை அணிந்து மனதை கொள்ளை கொண்டுள்ளார் ஸிவா.

என்ன புகைப்படம்?

என்ன புகைப்படம்?

நீச்சல் குளம் ஒன்றில் தோனி மற்றும் ஹர்திக் பண்டியா உள்ளனர். அவர்களுடன் ஸிவாவும் நடுவே தோனியின் உதவியுடன் இருக்கிறார். ஐந்து புகைப்படங்களை ஸிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி.

குட்டி சுறா உடை

அந்த புகைப்படங்களின் கீழே "குட்டி சுறா" (Baby shark) என குறிப்பிட்டு உள்ளார். ஸிவா சுறா போன்ற உடை அணிந்து காட்சி அளிப்பதை தான் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

அழகான சிரிப்பு

அழகான சிரிப்பு

மேலும், நீச்சல் குளத்தில் தன் தந்தையுடன் ஜாலியாக விளையாடியதையும் பார்க்க முடிந்தது. ஸிவா அழகாக சிரிக்கும் காட்சிகளும் புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்பட தொகுப்பை சுமார் 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

பிரபலம் ஆன ஸிவா

பிரபலம் ஆன ஸிவா

இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்ட ஸிவாவை, சுமார் 14 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டிகளின் போது தோனியை உற்சாகப்படுத்துவது, பிராவோவுக்கு எப்படி கேப் அணிய வேண்டும் என சொல்லிக் கொடுப்பது என ஸிவாவின் பல வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தை கலக்கி உள்ளது.

தோனி நிலை

தோனி நிலை

மறுபுறம் தோனி உலகக்கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இரண்டு மாத காலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்து, சில வாரங்கள் இந்திய இராணுவத்துடன் நேரம் செலவிட்டார்.

தென்னாப்பிரிக்கா தொடரில் இல்லை

தென்னாப்பிரிக்கா தொடரில் இல்லை

அடுத்து நடக்க உள்ள தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. தோனி இனி இந்திய அணிக்காக ஆடுவாரா? என்பதும் கேள்வி குறியாகவே உள்ளது.

Story first published: Thursday, September 12, 2019, 12:19 [IST]
Other articles published on Sep 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+