தல தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…!! வைரல் வீடியோ
Recommended Video
மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை, ரிஷப் பன்ட்டுடன் சேர்ந்து தோனியின் மகள் ஸிவா கொண்டாடிய வீடியோ... பயங்கர ஹிட்டடித்து உள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.

337 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோகித், கோலி, ராகுல் ஆகியோரின் அதிரடி ஆட்டம், விஜய் சங்கர். குல்தீப் மற்றும் ஹர்திக் எடுத்த அசத்தல் விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்தியா, வரலாற்று வெற்றி பெற்றது.
போட்டியில் டாஸ் வென்றும் பேட் செய்யாமல், பவுலிங்கை தேர்வு செய்தது, சொதப்பல் பவுலிங், ரன் அவுட்டை மிஸ் செய்தது என பாக். அணியின் மீது விமர்சனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ரசிகர்களும் மீம்சுகளால் தெறிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.
அதேநேரத்தில், போட்டியை இந்திய ரசிகர்களும், அணியினரும் கொண்டாடி தள்ளினர். இந்த கொண்டாட்டத்தில் தோனியின் மகளும், சேர்ந்து குஷியாகி இருப்பது தான் ஹைலைட்.
போட்டியின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்த தோனியின் மகள் ஸிவா, இளம் வீரர் ரிஷப் பன்ட்டுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்தார். இந்தியா வெற்றி பெற்ற மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உரக்கக் கத்திக் கொண்டாடினர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஏற்கனனே, ஸிவா தோனியின் வீடியோக்கள் ஏகத்துக்கும் வைரலாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications