Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா குப்பையைப் போட்டது.. தோனி மகளுக்குத்தான் எத்தனை பொறுப்பு பாருங்க!

ராஞ்சி: எல்லோரும் வீட்டோடு இருக்கிறார்கள். குறிப்பாக விளையாட்டுத்துறையினர். காரணம் தெரிந்ததுதான் கொரோனாவைரஸ்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

வீட்டோடு இருந்தாலும் பழைய போட்டிகளை அசை போட்டபடியும், அதுகுறித்து ஏதாவது எழுதியபடியும், வீடியோ போட்டபடியும் உள்ளனர். ஜெர்மனியில் பேயர்ன் மூனிச் கால்பந்து அணி மீண்டும் பிராக்டிஸை தொடங்கி விட்டது.

Ziva Dhoni cleanes the lawn in her house

ஆனால் மற்ற பகுதிகளில் நிலைமை இன்னும் சரியாகவில்லை. இந்த நிலையில் நம்ம முன்னாள் கேப்டன் தோனி வீட்டில் ஒரு ஜாலி காட்சி காணப்பட்டது. அதை வீடியோவாக போட்டுள்ளார் தோனி.

தோனியின் மகள் ஜிவா தான் அந்த வீடியோவில் காட்சி தருபவர். தனது வீட்டு தோட்டத்தில் காணப்படும் குப்பைகளை அதாவது இலை சருகுகளை எடுத்து தூக்கி தூரப் போட்டபடி போகிறது இந்த குட்டிப் பாப்பா.. அதுவும் சரிதான் எவ்வளவு நேரம்தான் வீட்டுக்குள்ளேயே இருந்து பொம்மை விளையாட்டு விளையாடுவது என்று களத்தில் குதித்து விட்டார் போல ஜிவா.

தோனியே போரடித்துப் போய் பேட் மிண்டன் பயிற்சி எடுத்துக் கொண்டார். மேலும் தனது வீட்டில் நல்ல ஓய்விலும் இருந்து வருகிறார். தோனிக்கு நிகராக இணையதளத்தில் புகழ் பெற்றவர் அவரது மகள் ஜிவா. அப்பாவுடன் செய்த சேட்டை வீடியோக்கள் நிறைய வலம் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளன. அதேபோல நீச்சல் அடிப்பது, சென்னை பீச் மணலில் அப்பா கூட விளையாடியது. அப்பா இவருக்கு தலை வாரி விட்டது என நிறைய வீடியோக்கள் வந்துள்ளன.

இந்த வீடியோவைப் பார்த்தால் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால் ஜிவாவுக்கும் ரொம்ப போரடிச்சுருச்சு போல. அதனால்தான் புல்வெளியில் ஒரு ரவுண்டு அடித்துள்ளார். கீழே கிடந்த குப்பையை எடுத்து தூரமாக போட்டுள்ளார். எப்படியோ ஆக்டிவாக இருக்கிறார் ஜிவா என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. ஜிவா ஆக்டிவாக இருக்கும் இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, April 7, 2020, 14:58 [IST]
Other articles published on Apr 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+