Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து அடுக்கி வைத்த குக்கீஸ்... அழகான தந்தை -மகள் கூட்டணி... ஜிவாவுடன் விளம்பரத்தில் தோனி!

டெல்லி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது மகள் ஜிவாவின் அழகான உறவு எப்போதுமே சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

எப்போதும் இவர்களின் குறும்புகளை சாக்ஷி சிங் தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விடுவார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து முதல்முறையாக ஒரு குக்கி விளம்பரத்தில் நடித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அழகான தந்தை -மகள் உறவு

அழகான தந்தை -மகள் உறவு

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய ஒரே மகள் ஜிவாவின் பாசத்திற்குரிய தந்தையாக வலம் வருபவர். இவர்கள் இருவரின் குறும்புத்தனங்களை அவ்வப்போது சாக்ஷி சிங் தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதும் அது வைரலாவதும் வாடிக்கையாக நடைபெறுவதுதான்.

தோனி -ஜிவா உறுதிமொழி

தோனி -ஜிவா உறுதிமொழி

இப்போது ஜிவா மற்றும் தோனி இருவரும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். இருவரும் இணைந்து குக்கி விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். ஓரியோ ப்ளே ப்ளட்ஜ் பிரசாரம் என்ற அந்த குக்கி விளம்பரத்தில் இருவரும் இணைந்து கேக் செய்வதாகவும் அதையொட்டி அவர்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி என்று போகிறது அந்த விளம்பரம்.

அறிவுறுத்தும் விளம்பரம்

அறிவுறுத்தும் விளம்பரம்

போன் உள்ளிட்டவற்றை தவிர்த்துவிட்டு உறவுகளுக்காக நேரம் ஒதுக்கவும் அந்த விளம்பரம் அறிவுறுத்துகிறது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் ஜிவாவிற்கு உண்டு. இந்நிலையில் இந்த விளம்பரம் மூலம் அவர் மேலும் ரசிகர்களின் இதயங்களை அதிகமாக வென்றுள்ளார்.

அழகான செய்தி

இந்நிலையில் முதல் முறையாக ஜிவாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். இந்த ஓரியோ பிரசாரம் மற்றும் அதன் அழகான செய்திக்காக நேரத்தை செலவழித்தது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் நமது குடும்பத்திற்காக நேரம் செலவழிக்க நமக்கு உத்வேகம் பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 6, 2021, 15:36 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+