Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏய்.. ஒழுங்கா கேரட் சாப்பிடு!! தன் சுட்டி மகளுக்காக முயலாக மாறிய தோனி - வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சுட்டி மகள் ஸீவா ஊட்டிய கேரட்டை முயலாக மாறி சாப்பிட்டார் தோனி.

தோனி தற்போது ஓய்வில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறார்.

அப்போது, தன் மகள் கேரட் ஊட்டிய காட்சியை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி.

தோனி டி20 அணியில் இல்லை

தோனி டி20 அணியில் இல்லை

தோனி கடந்த இரண்டு டி20 தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டி அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 2019 உலகக்கோப்பை வரை தோனி கிரிக்கெட் ஆடுவார் என கூறப்படுகிறது.

தோனியின் ஓய்வு நேரம்

தோனியின் ஓய்வு நேரம்

இந்த நிலையில், தோனி தன் நேரத்தை குடும்பத்தினருடனும், விளம்பர நிகழ்ச்சிகளிலும் செலவிட்டு வருகிறார். தன் சுட்டி மகள் ஸீவா செய்யும் குறும்புத்தனங்களை அவ்வப்போது வீடியோ எடுத்து பகிர்வார் தோனி.

View this post on Instagram

Ziva’s bugs bunny @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

ஸீவா வீடியோ

தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில் ஸீவா நீளமான கேரட் ஒன்றை தோனிக்கு ஊட்டுகிறார். தோனி அதை முயல் போல எக்கி வந்து கடிக்கிறார். இந்த வீடியோ பதிவில், "Ziva's Bugs Bunny" என குறிப்பிட்டுள்ளார் தோனி. Bugs Bunny கார்ட்டூனில் வரும் ஒரு முயல் கதாபாத்திரம் ஆகும்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது. இது முடிந்த பின்னர் டெஸ்ட் தொடரும், ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகள் தொடரில் தோனி பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 24, 2018, 15:47 [IST]
Other articles published on Nov 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+