Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது கேப்டன் கூல் தோனிக்கு வயசாயிடுச்சா....... சொல்வது யார் தெரியுமா!

Recommended Video

ஒரே நாளில் இரண்டு சாதனைகள் செய்த தல தோனி- வீடியோ

டெல்லி: இந்திய கிரி்க்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனிக்கு வயசாயிடுச்சாம். 37வது பிறந்தநாளில் அவரிடம் இதை சொன்னது யார் தெரியுமா? வைரல் வீடியோ புகழ் செல்லக்குட்டியான ஜிவாதான்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. டி-20 போட்டித் தொடரை அபாரமாக வென்றது. நேற்று முன்தினம் தனது குடும்பத்தார் மற்றும் அணி வீரர்களுடன், கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி தன்னுடைய 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உலகெங்கும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வெள்ளம்போல் குவிந்தது.

ziva says dad dhoni becoming old

அந்த வாழ்த்துகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது ஒரு குட்டி வாழ்த்து. அவருடைய செல்ல மகள் ஜிவா, "ஹாப்பி பர்த்டே டாடி. யு ஆர் பிகமிங் ஓல்ட்" என்று வாழ்த்து கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. நான்கு வயதான ஜிவா இவ்வாறு கூறியதற்கு காரணம், சால்ட் அண்ட் பெப்பர் தாடியுடன் தோனி இருப்பது காரணமாக இருக்கலாம்.

வயசாயிடுச்சு என்று யாராவது விமர்சனம் செய்தால், அதற்கு பேட்டிங்கிலும் கீப்பிங்கிலும் பதிலடி தருவது தோனியின் ஸ்டைல். வயதானவர்கள் அணி என்று விமர்சனம் செய்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று தந்து வாயடைத்தார் தோனி. இது சமீபத்திய உதாரணம். இதுபோல பல இருக்கு.

தற்போது வயசாயிடுச்சுன்னு சொன்னது செல்ல மகளாச்சே. இருந்தாலும் மற்றவர்கள் விமர்சனம் செய்வதை தடுக்கும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் மீண்டும் தோனி செய்து காட்டினார். டி-20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் புரிந்தார். மேலும் நேற்றைய போட்டியில் 5 கேட்ச் பிடித்து அசத்தினார்.

ஜிவா முதற்கொண்டு இனி யாரும் தோனிக்கு வயசாயிடுச்சுன்னு சொல்ல முடியுமா.

Story first published: Monday, July 9, 2018, 11:08 [IST]
Other articles published on Jul 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+