வீரர்களின் 'வன்முறை'-பிரேசில் கவலை!

கால்பந்துப் போட்டிகளில் முட்டல், மோதல், காயம் சகஜம். ஆனால் முக்கிய வீரர்கள் காயப்படும்போது அந்த அணிக்கு பெரும் சிக்கலாகி விடுகிறது. பிரேசில் அப்படிப்பட்ட அணி.
பிரேசில் அணியின் மிட்பீல்ட் சூப்பர் ஸ்டார் எலனோ, ஐவரி கோஸ்ட்டுடன் நடந்த போட்டியின்போது அந்த அணி வீரர்கள் மோதியதால் காயமடைந்தார். இதனால் நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியி்ல அவர் விளையாட முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது. பிரேசிலுக்காக 2 கோல்களைப் போட்டுள்ளார் எலனோ.
இந்தக் காயம் காரணமாக போர்ச்சுகலுக்கு எதிராக நடந்த போட்டியிலும், சிலிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்திலும் எலனோ விளையாட முடியவில்லை.
தனது காயம் குறித்து எலனோ கூறுகையில், போட்டியின்போது என்னை வேண்டும் என்றே ஐவரி கோஸ்ட் வீரர்கள் முட்டி மோதி தள்ளி விட்டு விட்டனர். இதுகுறித்து என்னால் நடுவரிடம் பேசக் கூட முடியவில்லை. அவரும் ஃபெளல் கொடுக்கவில்லை.
அதேபோல ராபின்ஹோ மீதும் எதிரணியினர் முரட்டுத்தனமாக மோதினர். இதற்கு ரெட் கார்டே கொடுத்திருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.
முக்கிய வீரர்கள் மீது எதிரணியினர் இதுபோல மோதி வன்முறையாக நடந்து கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் எலனோ.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications