உலகக் கோப்பைக் கால்பந்து-நாளை காலிறுதிப் போட்டிகள் தொடக்கம்

தென் ஆப்பிரி்ககாவில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் சுற்றுப் போட்டிகள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் முடிந்து விட்டன.
இதையடுத்து பிரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, உருகுவே, ஜெர்மனி, பராகுவே, கானா ஆகிய எட்டு அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன.
இவற்றுக்கிடையிலான காலிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பிரேசிலும், நெதர்லாந்தும் மோதுகின்றன.
2வது போட்டியில் உருகுவேயும், கானாவும் மோதுகின்றன.
நாளை மறு நாள் சனிக்கிழமை நடைபெறும் போட்டிகளில் முதலில் அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் மோதும் போட்டி நடைபெறுகிறது.
2வது போட்டியில், பராகுவேயும், ஸ்பெயினும் மோதவுள்ளன.
இந்தப் போட்டித் தொடரில் விறுவிறுப்பான ஆட்டத்தை ஏற்படுத்திய அணி நெதர்லாந்து. எனவே நாளை பிரேசிலுடனான அதன் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரேசில்தான் வெல்லும் என கணித்துள்ளனர். ஆனால் நெதர்லாந்து ஆச்சரியப்படுத்தினாலும் சொல்வதற்கில்லை.
நெதர்லாந்தைப் போலவே சத்தமில்லாமல் கலக்கிய இன்னொரு அணி கானா. இந்த அணி, முன்னாள் சாம்பியன் உருகுவேயுடன் நாளை மோதுகிறது. இந்தப் போட்டியிலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி என்றால் அது அர்ஜென்டினா - ஜெர்மனி இடையிலான போட்டிதான். இரு ஜாம்பவான் அணிகள் மோதவுள்ளதால் இந்தப் போட்டியில் பட்டாசு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்து போட்டிகளை விட நாளை முதல் நடைபெறப் போகும் போட்டிகள்தான் பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இப்போதே துடிப்புடன் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications