முதல் காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதல்-பிரமிக்க வைக்குமா பிரேசில்

காரணம், நெதர்லாந்து மிக பலம் வாய்ந்த அணியாக இந்த தொடரில் உருவெடுத்துள்ளது. தர வரிசையில் 4வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, இந்தத் தொடரில் அட்டகாசமாக ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதேசமயம், 5 முறை சாம்பியனான பிரேசில் நல்ல அனுபவத்துடன் நிறை குடும் போல அமைதியாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே அட்டாக்கில்தான் குதிக்கும். அதற்கேற்ற அசகாய சூரர்கள் இரு அணியிலும் நிறையவே உள்ளனர் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
சிலியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் ஹாயாக நுழைந்துள்ளது பிரேசில். அதேசமயம், ஸ்லோவேகியாவை 2-1 என்றகோல் கணக்கில் கடுமையாக போராடி வந்துள்ளது நெதர்லாந்து.
இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளன. 1974ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது பிரேசிலை 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வீழ்த்தியுள்ளது.
அதேசமயம், 1994 போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை நாக் அவுட் செய்தது பிரேசில். மேலும் 1998 அரை இறுதிப் போட்டியிலும் பிரேசிலே வென்றுள்ளது.
காகா, பேபியானோ என பிரேசில் ஜாம்பவான்களும், அர்ஜென் ராபன், ராபிந் வான் பெர்சி போன்ற நெதர்லாந்து அட்டாக்கர்களும் மோதிக் கொள்வதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
போட்டி குறித்து நெதர்லாந்து பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விக் கூறுகையில், பிரேசில் அருமையான அணி, மிகப் பெரிய சவால். இருப்பினும் வெற்றியில் மட்டுமே நாங்கள் கவனமாக இருக்கிறோம். பட்டத்தை வெல்வதே எஙகளது லட்சியம். அதற்குப் பக்கத்தில் வந்து விட்டதால் கவனத்துடன் அடியெடுத்து வைப்போம் என்றார்.
இந்தப் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். இவர்கள்தான் என்று கணித்துக் கூற முடியாது என கால்பந்து விமர்சகர்கள் கூறியுள்ளதால் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்குப் போயுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications