Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாபத்தை முடிக்குமா ஸ்பெயின்?

Roque Santa Cruz (L) and Spain's forward David Villa
கடந்த எட்டு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அரை இறுதிக்குள் நுழைய முடியாமல் தவித்து வரும் ஸ்பெயின் அந்த சாபத்தை முறியடித்து இன்று நுழையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஸ்பெயினும், பராகுவேயும் எதிரும் புதிருமான ஆட்டத்திறமை கொண்ட அணிகள். பராகுவே டிபன்ஸில் கில்லாடி. அதேசமயம், ஸ்பெயின் அட்டாக்கில் கில்லி.

ஸ்பெயின் அணி கடந்த எட்டு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் தவித்து தடுமாறியுள்ளது. இதனால் இந்த முறை எப்படியும் அரை இறுதிக்குள் போய் விட வேண்டும் என்ற வெறியுடன் அது உள்ளது.

இரு நாடுகளும் நான்காவது முறையாக இன்று மோதுகின்றன. இதில் 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஸ்பெயின் ஒரு வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், 1986 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஸ்பெயினிடம் பராகுவே தோல்வியுற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஸ்பெயினுக்கு சற்று கவலை அளிக்கும் விஷயம்.

இரு அணிகளும் வேறு வேறு தளத்தில் பலமானவை. எனவே இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது.

சாபத்தை முறியடித்து ஸ்பெயின் அரைஇறுதிக்குள் நுழையுமா அல்லது பராகுவே தனது வெற்றி வரலாற்றைத் தொடருமா?
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+