உலகக் கோப்பை மாதிரிக்குள் கொகைன் வைத்து கடத்தல்

உலகக் கோப்பையைப் போலவே ஒரு மாதிரியை செய்து அதற்குள் கொகைன் போதைப் பொருளை பதுக்கி வைத்து தபால் மூலம் அனுப்பியுள்ளனர். கிப்ட் பார்சல் போல அதை அனுப்பியுள்ளனர்.
இந்தப் பார்சலைப் பார்த்த கொலம்பியா தபால்துறையினர் வித்தியாசமாக இருக்கிறதே என நினைத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் உலகக் கோப்பை மாதிரி இருப்பதைப் பார்த்து வியந்தனர்.ஆனால் அதன் சைஸ் சற்று வினோதமாகவே இருக்கவே உள்ளே பார்த்தபோதுதான் அதற்குல் கொகைன் இருப்பது தெரியவந்து அதிர்ந்தனர்.
இதையடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதை அனுப்பியது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனராம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications