ரொனால்டோ தந்தையானார்!

தனது காதலி யார் என்பதை இதுவரை ரொனால்டோ ரகசியமாக வைத்துள்ளார். கடைசி வரை தனது குழந்தையை ரகசியமாகவே வைத்திருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து போர்ச்சுகல் நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி உண்மைதான் என்று ரொனால்டோவின் ஏஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் தனது குழந்தை மற்றும் அதன் தாயாரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் ரொனால்டோவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரொனால்டோவின் காதலி அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், ஜூன் மாதம் குழந்தை பிறந்துள்ளதாகவும் அந்த ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் போர்ச்சுகல் வாய்ப்பிழந்ததால், ரொனால்டோ பெரும் சர்ச்சைக்குள்ளானார். இந்த நிலையில் குழந்தை பிறந்திருப்பது ரொனால்டோவுக்கு சற்று சந்தோஷத்தை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications