ஆனந்த்தின் ஓட்டு ஸ்பெயினுக்கே!

ஸ்பெயினை தனது 2வது வீடு என்று கூறி வருபவர் ஆனந்த். காரணம், அவருக்கு ஸ்பெயினில் ஒரு வீடு உள்ளது. அங்கிருந்தபடிதான் தனது சர்வதேச செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியிலும் ஸ்பெயினே வெல்லும் என்று கூறியுள்ளார் ஆனந்த்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ஸ்பெயினின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களது ஆட்ட நேர்த்தியும், பாணியும் சிம்ப்ளி சூப்பர்ப். அபாரமாக இருக்கிறது.
அதேபோல அர்ஜென்டினாவின் ஆட்டமும் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக மெஸ்ஸி என்னை கவர்ந்து விட்டார். ஆனால் இப்போது அர்ஜென்டினா களத்தில் இல்லை. எனவே எனது ஓட்டு ஸ்பெயினுக்குத்தான்.
ஸ்பெயின் தற்போது ஐரோப்பிய சாம்பியனாக உள்ளது. உலகக் கோப்பையையும் அது வெல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. அது அவர்களுக்கு கடினமாக இருக்காது என கருதுகிறேன்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications