ஆளுக்கு ஒரு புள்ளியுடன் படு மோசமான நிலையில் உள்ள பிரான்ஸும், தென் ஆப்பிரிக்காவும் இன்று சந்திக்கின்றன. பிரான்ஸ் அணி இன்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றேயாக வேண்டிய கடும் இக்கட்டான நிலையில் உள்ளது.
ஏதாவது அற்புதம் நடந்தால்தான் உண்டு என்று படு விரக்தியுடன் கூறுகிறார் பிரான்ஸ் பயிற்சியாளர் ரேமன்ட் டொமினிச். அந்த அளவுக்கு மகா மோசமாக ஆடி வருகிறது பிரான்ஸ்.
பிரான்ஸ் தனது முதல் போட்டியில் உருகுவேயுடன் கோலே போட முடியாமல் டிரா செய்தது. 2வது போட்டியில் அதிர்ச்சி தரும் வகையில் மெக்சிகோவிடம் 0-2 என்ற கேவலமான தோல்வியைச் சந்தித்தது.
இன்றைய போட்டியில் பிரான்ஸின் ஹியூகோ லோரிஸ், தென் ஆப்பிரிக்காவின் மொனீப் ஜோசப்ஸ் ஆகியோரின் ஆட்டம் கவனிப்புக்குரியதாக இருக்கலாம்.
இன்றைய போட்டியில் வென்றாலும் கூட மெக்சிகோ, உருகுவே ஆட்டத்தின் முடிவைப் பொறுத்துதான் பிரான்ஸ் நாக் அவுட்டுக்கு முன்னேறுவது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]