கோல்டன் பூட் விருதை வெல்லப் போவது யார்?

தற்போதைய நிலவரப்படி தலா 5 கோல்களை அடித்துள்ள ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லாவும், நெதர்லாந்தின் ஸ்னீடரும் முன்னணியில் உள்ளனர். இதனால்யாருக்கு கோல்டன் பூட் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அடுத்து 4 கோல்கள் அடித்து ஜெர்மனியின் தாமஸ் முல்லர், உருகுவேயின் டியகோ போர்லான், ஜெர்மனியின் மிரஸ்லோவ் குளோஸ், அர்ஜென்டினாவின் ஹிகுயன், ஸ்லோவேகியாவின் ராபர்ட் விட்டக் ஆகியோர் உள்ளனர்.
அதிக கோல்கள் அடித்தவர்கள் வரிசையில் தற்போதைக்கு வில்லாவும், ஸ்னீடரும் முன்னணியில் உள்ளனர். நெதர்லாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. எனவே ஸ்னீடர் மேலும் கோல்கள் போட வாய்ப்புள்ளது.
ஸ்பெயின் இன்று ஜெர்மனியை சந்திக்கிறது. இதில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அதிக கோல்கள் அடிக்கும் வாய்ப்பு வில்லாவுக்குக் கிடைக்கும் என்பதால் அவருக்கே விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாக உள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications