டேவிட் வில்லா போட்ட அபாரமான கோலால் பராகுவேயை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்.
வில்லா அடித்த கோல் இரு கோல் கம்பங்களையும் தொட்டி கடைசியில் உள்ளே சென்று கோலானது.
நேற்றைய ஆட்டத்தின் முழு நேரமும் போட்டி படு விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் கடுமையாக மோதியதால் கோல் கிடைக்காமல் இரு அணிகளும் தடுமாறின. முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் விழவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டமும்கோல் இல்லாமல் நீடித்தது. இந்த நிலையில் 83வது நிமிடத்தில் சப்ஸ்டிடியூட் வீரர் பெட்ரோ ரோட்ரிகஸ் பந்தை கோல் கம்பத்திற்குள் தள்ள முயற்சித்தார். அது கம்பத்தில் பட்டு வில்லாவை நோக்கி ஓடி வந்தது. அதை சாதுரியமாக அடித்தார் வில்லா. அது கோல் கம்பத்தின் மறுபக்கம் பட்டு உள்ளே புகுந்து கோலானது.
இந்த அபாரமான கோல் மூலம் ஸ்பெயின் அணி வெற்றி தழுவிக் கொண்டது.
புதன்கிழமை நடக்கும் அரைஇறுதிப் போட்டியில் ஜெர்மனியை சந்திக்கிறது ஸ்பெயின்.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]