Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெர்மனியை விழுங்கிய 'புயல்'!

புயல் வேகத்தில் கடைசி நேரத்தில் கார்லஸ் புயோல் போட்ட கோலால் வலுவான ஜெர்மனியை தரைமட்டமாக்கி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது ஸ்பெயின்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணியின் முதல் கோப்பைக் கனவு நிறைவேறுவதற்கு இன்னும் ஒரு படி மட்டுமே போக வேண்டும்.

டர்பனில் நேற்று இரவு நடந்த இந்தப் போட்டி பெரும் விறுவிறுப்பாக இருந்தது. ஐரோப்பிய சாம்பியன் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்ற அணி ஸ்பெயின் என்பதால் அதைப் பழி தீர்க்க ஜெர்மனி முயலும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஆட்டமும் படு அனலாக இருந்தது.

இரு அணிகளும் கோலடிக்க கடுமையாக முயன்றனர். இதனால் போட்டி விறுவிறுப்பானது. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.

இதனால் 2வது பாதி ஆட்டத்தில் கோலடிக்கும் முயற்சிகளை இரு அணியினரும் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் 73வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் போடும் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. மின்னல் வேகத்தில் வந்த பாலை தலையால் முட்டி கோலாக்கினார் புயோல். இதை எதிர்பாராத ஜெர்மனி அதிர்ச்சியி்ல் உறைந்தது.

இந்தப் போட்டி ஜெர்மனிக்கு 12வது அரை இறுதிப் போட்டியாகும். அதேசமயம், ஸ்பெயினுக்கு முதல் போட்டி. இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். அதேசமயம், 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கனவை ஜெர்மனி தொலைத்து விட்டது.

நேற்றைய போட்டியில் தாமஸ் முல்லர் இடம் பெறாமல் போனது ஜெர்மனிக்கு பெரும் சிரமமாகப் போய் விட்டது.

ஸ்பெயின் அணி ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே கோலடித்திருக்கும். பெட்ரோ எடுத்துக் கொடுத்த பந்து டேவிட் வில்லாவை நோக்கிச் சென்றது. ஜெர்மனி தடுப்புகளை லாவகமாக சமாளித்த வில்லா அதை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். ஆனால் ஜெர்மனி கோல்கீப்பர் நியூயர் அழகாக தடுத்து விட்டார்.

அதேபோல 14வது நிமிடத்தில் இனியஸ்டா உதைத்து அனுப்பிய பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்றார் புயோல். ஆனால் கோல் கம்பத்துக்கு வெளியே போனதால் ஜெர்மனி பிழைத்தது.

முதல் பாதி ஆட்டத்தின் முக்கால்வாசி நேரமும் பந்து ஸ்பெயின் வசமே இருந்ததால் ஜெர்மனி பெரும் திணறலை சந்தித்தது.

இருப்பினும் 2வது பாதி ஆட்டத்தில் சற்று எதிர்ப்பைக் காட்டியது ஜெர்மனி. லூகாஸ் போடோல்ஸ்கி பாஸ் செய்த பந்தை ஓசில், குளோஸுக்கு அனுப்ப அடுத்த விநாடியே ஸ்பெயின் வீரர்கள் அவரை சூழ்ந்து கோலடிக்க முடியாதபடி செய்து விட்டனர்.

நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியின் வேகம் சரியாக இல்லை. பல அருமையான தருணங்களை அது தவற விட்டது. இது ஸ்பெயினுக்கு பெரும் சாதமாகிப் போனது.

ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஸ்பெயின், 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நெதர்லாந்தை சந்திக்கிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் யார் வென்றாலும் அது அவர்களுக்கு முதல் கோப்பையாகும். அதேபோல கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஐரோப்பாவுக்கே கோப்பை போகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+