சிறந்த இளம் வீரர் யார்?

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் டெக்னிகல் ஸ்டடி பிரிவு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில்இடம் பெறத்தகுதியான வீரர்கள் 1989ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன்போ அல்லது அன்றோ பிறந்திருக்க வேண்டும். இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்த விருது பெறும் வீரர் யார் என்பதை ஃபிஃபா அறிவிக்கும்.
வெற்றியாளருக்கு விருதும், புத்தம் புதிய ஹூண்டாய் டஸ்கான் ஐஎக்ஸ் 35 காரும் பரிசாக அளிக்கப்படும்.
இந்த தொடருக்கான விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருப்போர்...
தாமஸ் முல்லர் (ஜெர்மனி) - பேயர்ன் மூனிச் கிளப்பில் ஆடி வரும் தாமஸ் முலல்ர், இந்த ஆண்டுஉலகக் கோப்பைப் போட்டிகளில் அசத்தலாக ஆடினார்.கடந்த மார்ச் மாதம்தான் இவர் சீனியர் அணியில் இடம்பெற்றார். 20 வயதாகும் முல்லர், இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் 4 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல்கள் விழ காரணமாக இருந்தார்.
ஜியோவனி டாஸ் சான்டோஸ் (மெக்சிகோ) - 21 வயதாகும் சான்டோஸ், மெக்ஸிகோ அணியின் சிறந்த வீரர்களில் ஒருவர். 16 வயதிலேயே கால்பந்து ஆட வந்தவர். 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் மெக்சிகோ சாம்பியனாக உதவியவர்.
ஆன்ட்ரே அயூ (கானா) - கானாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் வீரரான அபேதி பீலேவின் மகன் தான் அயூ. இளம் வயதிலிருந்தே கால்பந்தில் கலக்கி வருபவர். 20 வயதுக்குட்பட்டோருக்கான கானா அணியில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். மிட்பீல்டில் கலக்கி வரும் அயூ, கானா அணியின் முக்கிய வீரராக மாறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications