யாருக்கு உலகக் கோப்பை? கணித்துக் கூற ரொமாரியோ மறுப்பு

பிரேசில் அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரொமாரியோ. 1000 கோல்கள் அடித்த சாதனையாளர். பிரேசில் அணி 1994ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல ரொமாரியோவின் அற்புதமான ஆட்டமே காரணம்.
தற்போதைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள், நெதர்லாந்தா அல்லது ஸ்பெயினா என்று ரொமாரியோவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ரொமாரியோ பதிலளிக்கையில், எனக்கு யார் மீதும் தனிப்பட்ட அபிப்பிராயம் கிடையாது. யார் சிறப்பாக ஆடுவார்களோ அவர்களே வெல்வார்கள் என்றார் ரொமாரியோ.
பிரேசில் அணிக்காக ஆடிய ரொமாரியோ, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் தங்கி அங்குள்ள அணிகளுக்காகவும் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளுக்கு எதிராகவும் ஆடியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications