இறுதிப் போட்டிக்கான நடுவர்-ஸ்பெயின் அதிருப்தி

நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஹோவர்ட் வெப் நடுவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்பெயினில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம்- நடப்புத் தொடரில் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி சுவிட்சர்லாந்திடம் தோல்வியைத் தழுவியது. இதனால் ராசிரீதியாக வெப் வந்தால் சகுனம் சரியில்லை என்பது போல நினைக்கின்றனர் ஸ்பெயின் நாட்டினர்.
மேலும், சுவிட்சர்லாந்துடனான போட்டியின்போது வெப் இரண்டு தவறுகளைச் செய்ததால்தான் தாங்கள் தோல்வி அடைந்ததாக ஸ்பெயின் அணியினரும் குற்றம் சாட்டியிருந்தன்ர். இந்த நிலையில் வெப், இறுதிப் போட்டிக்கான நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது ஸ்பெயின் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதுகுறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் ஆட்சேபனை எதையும் ஸ்பெயின் பதிவு செய்யவில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications