Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையில் ஐரோப்பாதான் கில்லி... நாக் அவுட்டில் 10 அணிகள்... கோப்பையை வெல்வது யார்!

Recommended Video

நாக் அவுட்டில் 10 அணிகள்...கோப்பையை வெல்ல போவது யார்?- வீடியோ

மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது,

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்ற 32 அணிகள், தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்கி, ஜூலை 3 வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

ஃபிபாவின் சார்பில் உலகெங்கும் உள்ள 5 கால்பந்து கூட்டமைப்புகள் உலகெங்கும் நடத்திய தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற அணிகளே உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் வென்று, 14 நாடுகள் உலகக் கோப்பை வந்தன. ஆசியாவில் இருந்து 5, ஆப்பிரிக்காவில் இருந்து 5, தென் அமெரிக்காவில் இருந்து 5, வட அமெரிக்காவில் இருந்து 3 நாடுகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

தற்போது முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்து, நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் துவங்க உள்ளன. இதில் ஐரோப்பாவில் இருந்து முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் முன்னேறின. இதைத் தவிர ரஷ்யா, பெல்ஜியம், குரேஷியா, டென்மார்க், நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்ச்சுகல், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து என 10 ஐரோப்பிய நாடுகள் நாக் அவுட் முன்னேறியுள்ளன. அறிமுக அணியான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்து, நடப்பு சாம்பியன் ஜெர்மனி ஆகியவை வெளியேறின.

ஜப்பான் முன்னேறியது

ஜப்பான் முன்னேறியது

ஆசியா பிரிவில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகியவை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன. இதில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா, தென்கொரியா முதல் சுற்றுடன் வெளியேறின.

ஆப்பிரிக்கா வாஷ்அவுட்

ஆப்பிரிக்கா வாஷ்அவுட்

ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனீஷியா ஆகியவை உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அனைத்தும் முதல் சுற்றுடன் வெளியேறின. நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்து மீது தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது ஏமாற்றியது. அதே நேரத்தில் நைஜீரியா, துனீஷியா, செனகல் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன.

மூன்றில் ஒன்று

மூன்றில் ஒன்று

வட அமெரிக்கா பிரிவு தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற கோஸ்டாரிகா, மெக்சிகோ, அறிமுக அணியான பனாமா ஆகியவை உலகக் கோப்பையில் விளையாடின. இதில் மெக்சிகோ மட்டும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அர்ஜென்டினா, பிரேசில்

அர்ஜென்டினா, பிரேசில்

தென் அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகியவை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் எதிர்பார்த்ததை போலவே முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே ஆகியவற்றுடன் கொலம்பியாவும் நாக் அவுட் பிரிவுக்கு முன்னேறியது. பெரு வெளியேறியது.

Story first published: Friday, June 29, 2018, 11:12 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+