For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா

Shakira
தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாதமாகியுள்ள நிலையில் முதல் நாளிலிருந்தே என் மீது இங்குள்ள மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். எனது வாகா வாகா பாடலை அத்தனை வாய்களும் முனுமுனுப்பதைப் பார்க்கவும், கேட்கவும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகீரா.

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் போட்டிகள், வீரர்களுக்கு அடுத்து பிரபலமானது ஷகீரா பாடிய வாகா வாகா பாடல்தான். உலகக் கோப்பைக்காக இயற்றப்பட்ட இந்தப் பாடலைத்தான், தொடக்க நிகழ்ச்சியின்போது பாடி அனைவரையம் சிலிர்க்க வைத்தார் ஷகீரா. இன்று தென் ஆப்பிரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் இந்தப் பாடல் பிரபலமாகி விட்டது.

கடந்த ஒரு மாதமாக தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருக்கும் ஷகீரா கால்பந்துக்கு அடிமையாகி விட்டார். தினசரி கால்பந்து குறித்த செய்திகளைப் படிக்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என்கிறார் ஷகீரா. நான் இன்று பத்திரிகைகளின் விளையாட்டுப் பிரிவு செய்திகளைப் படிக்க ஆர்வம் காட்டுகிறேன் என்றால் அதற்குக் காரணம் கால்பந்துதான். எல்லாப் பெருமையும் புட்பாலுக்கே என்றும் மெய் சிலிர்க்கிறார் ஷகீரா.

உங்களது தென் ஆப்பிரிக்க அனுபவம் குறித்து சொல்லுங்கள் என்று ஷகீராவிடம் கேட்டபோது, இந்த ஒரு மாதமும் என்னால் மறக்க முடியாதது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். சமீப காலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது இந்த தென் ஆப்பிரிக்க பயணத்தில்தான்.

இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், பாசமானவர்கள். என் மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும், அன்பையும் என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை. எனது வாகா வாகா பாடல் இங்கு இந்தஅளவுக்கு பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் நாள் வந்து இறங்கியபோது குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் வாகா வாகா பாடலை பாடியபடி வரவேற்றதைப் பார்த்து குஷியாகி விட்டேன். நெகிழ்ச்சியடைந்தேன்.

இன்று என்னால் கால்பந்து இல்லாமல் சுவாசிக்கவே முடியாது போல. அந்த அளவுக்கு கால்பந்துக்கு அடிமையாகி விட்டேன்.காலையில் எழுந்ததும்இன்று என்ன போட்டி என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

விளையாட்டுக்கு அதிக ஆர்வம் காட்டாத என்னை இப்படி தூண்டி விட்டது கால்பந்துதான். கால்பந்து அற்புதமான விளையாட்டு. அதில் சந்தேகமே இல்லை.

நான் இந்த ஒரு மாத காலத்தில் 3 போட்டிகளை மட்டுமே நேரில் பார்த்தேன். தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த மெக்சிகோ-தென் ஆப்பிரிக்கா போட்டி மற்றும் அர்ஜென்டினா-நைஜீரியா போட்டி. அடுத்து ஸ்பெயின்-பராகுவே போட்டியைப் பார்த்தேன். இறுதிப் போட்டியையும் காணவுள்ளேன்.

நான் லத்தீன் அமெரிக்க அணிகளையே ஆதரிக்கிறேன். காரணம், உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர்கள்தான் அபாரமான ஆட்டத்தைக் கொடுக்கிறார்கள். அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே ஆகிய அணிகளின் ரசிகை நான். இருப்பினும் இந்த தொடரில் ஸ்பெயின் சிறப்பாக ஆடி வருகிறது. எனவே அதை நான் இப்போது ஆதரிக்கிறேன். நான் அடிப்படையில் ஸ்பெயின் பூர்வீகம் கொண்டவள். எனவே ஸ்பெயினை ஆதரிக்க வேண்டியது எனது கடமையாகும்.

இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை என்னால் கணித்துச் சொல்ல முடியாது. பெரும்பாலானவர்களைப் போல நானும் ஆக்டோபஸ் பால் கணித்துள்ளதையே நம்புகிறேன். பாலை நம்புவோம் என்கிறார் ஷகீரா சிரித்தபடி.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+