கோல் சாதனையை முறியடிக்க முடியாத குளோஸுக்கு ரொனால்டோ ஆறுதல்

உலகக் கோப்பைக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த ஒரே வீரராக பிரேசிலின் ரொனால்டா திகழகிறார். மொச்சைக் கொட்டி பல்லழகுடன் காணப்படும் ரொனால்டோ, உலகக் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர்.
உலகக்கோப்பைப் போட்டிகளில் ரொனால்டோ 15 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரில் ஜெர்மனியின் மிரஸ்லோவ் குளோஸ் இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகள் உருவானது. ஆனால் முடியவில்லை. 14 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது குளோஸால்.
உருகுவேக்கும், ஜெர்மனிக்கும் இடையே நடந்த 3வது இடத்து்கான போட்டியில் முதுகு வலி காரணமாக குளோஸ் இடம் பெறவில்லை. அதில் விளையாடியிருந்தால், 2 கோல்கள் அடித்திருந்தால் ரொனால்டோவின் சாதனையை முறியடித்திருக்க முடியும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரொனால்டோ, 14 கோல்களை அடிப்பது என்பது மிகப் பெரிய சாதனை. அதை படைத்துள்ள குளோஸை நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
உருகுவேக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
உலகக் கோப்பைப் போட்டிகளில் நான் ஒரு வரலாறு படைத்தேன். அதை முறியடிக்க முயன்றார் குளோஸ். இப்போது இனி வரும் வீரர்கள் அதை முறியடிக்க முயல்வார்கள் என நம்புகிறேன் என்றார் ரொனால்டோ.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications