இறுதிப் போட்டியில் 12 எல்லோ கார்ட்-1 ரெட் கார்டு காட்டிய நடுவர்!

கால்பந்துப் போட்டிகளில் எம்மாம் பெரிய வீரராக இருந்தாலும் நடுவர் முன்பு குட்டி சுண்டெலி போலத்தான் நடக்க முடியும். வீராப்பு காட்டினால் தூக்கி விடுவார் நடுவர் கையை -கார்டுடன்.
பெரிய பெரிய ஸ்டார் வீரர்களே கூட நடுவர்களிடம் அடக்கியே வாசிக்க முடியும்.
கால்பந்துப் போட்டிகளின்போது முரட்டு ஆட்டம் ஆடினாலோ அல்லது தவறாக நடந்து கொண்டாலோ இரண்டு முறை மஞ்சள் கார்டு காட்டுவார் நடுவர். அடுத்த முறை தவறு செய்தால் ரெட் கார்டு காட்டி வெளியேற்றி விடுவார்.
நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது நெதர்லாந்துக்கு ஒரு ரெட் கார்டு காட்டப்பட்டது. இரு அணிகளுக்கும் மொத்தமாக 13 மஞ்சள் கார்டு காட்டி புதிய சாதனை படைத்து விட்டார் நடுவர் வெப்.
நெதர்லாந்துக்கு மட்டும் 7 மஞ்சள் கார்டும், ஸ்பெயினுக்கு 5 கார்டும் காட்டப்பட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications