கடுமையாக போராடிய ஹோண்டுராஸை 1 கோலடித்து வீழ்த்தியது சிலி

எச் குரூப்பில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்கம் முதல் விறுவிறுப்பாக இருந்து. இரு அணிகளும் கடுமையாக முட்டி மோதின. கோலடிக்க ஹோண்டுராஸ் கடுமையாக முயன்றது. ஆனாலும் சிலியின் உஷாரான ஆட்டம் ஹோண்டுராஸின் கனவைத் தகர்த்து விட்டது.
முதல் பாதி ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் சிலியின் கோல் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. வால்டியாவிடமிருந்து வந்த பந்தை இஸ்லா பெற்று, அழகாக நிறுத்த, அதை கோல் கம்பத்திற்குள் தள்ளி கோலாக்கினார் ஜீன் பியூஸ்ஜோர். உண்மையிலேயே ஜோரான கோல்!
2வது பாதி ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை. கடைசி வரை தனது கோல் முயற்சியை ஹோண்டுராஸும் விடவில்லை, அவர்களைத் தடுப்பதில் சிலியின் முயற்சிகள் தொய்வில்லாமல் தொடர்ந்தது.
ஆட்டத்தின் முடிவில் மேலும் ஏதும் கோல் விழாமல் 1-0 என்ற கோல் கணக்கில் சிலி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக சிலிக்காக ஒரு கோலடித்து வெற்றித் தேடித் தந்த ஜீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications