For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்ஜென்டினா அட்டகாசமான வெற்றி-ஹிஹுயன் ஹாட்ரிக் போட்டார்

Chuyoung sores his own goal
அர்ஜென்டினா அசத்தலான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தி, தென் கொரியாவை சூறையாடி விட்டது. இந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே இன்றைய ஆட்டம்தான் மிக மிக விறுப்பானது என்பதில் சந்தேகம் இல்லை.

4 கோல்கள் போட்ட அர்ஜென்டினா, தென் கொரியாவை ஒரு கோல் மட்டுமே அடிக்க விட்டது.

முன்னதாக அர்ஜென்டினாவின் புயல் வேக ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து தென் கொரியர்கள் கடுமையாக மோதிப் பார்த்தனர். ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் சூறாவளியாக மாறி தென் கொரியர்களை குதறி விட்டனர்.

ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு பெரும் சோதனை ஏற்பட்டது. அர்ஜென்டினா ஸ்டிரைக்கர் லியோனல் மெஸ்ஸி அடித்த பந்தை தடுத்து டெமிசெலிஸ் கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அதைத் தடுக்க பாய்ந்தார் தென் கொரிய வீரர் சூயங். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பந்து அவரது காலில் பட்டு கோல் கம்பத்திற்குள் போய் விட்டது.

இந்த நிலையில் 33வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு 2வது கோல் கிடைத்தது. ஸ்டிரைக்கர் கான்சாலஸ் ஹிஹுயன் மிக எளிதான கோலை அடித்து அர்ஜென்டினாவுக்கு வலுவான முன்னிலையை கொடுத்தார்.

குறுகிய நேரத்திற்குள் அர்ஜென்டினா முன்னிலை எடுத்ததால் தென் கொரியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் தென் கொரியா மறுமலர்ச்சியைக் கண்டது. பார்க் சுங்யங் அபாரமான கோலைப் போட்டு அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த எதிர்பாராத கோல் மூலம் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. ஆனால் 2வது பாதி ஆட்டத்தின்போது அர்ஜென்டினா முன்பை விட படு வேகமாக ஆடியது.

குறிப்பாக அந்த அணியின் ஹிஹுயன் அட்டகாசமான ஆட்டத்தைக் காட்டி தென் கொரியாவை சூறையாடி விட்டார்.

76வது நிமிடத்தில் அவர் ஒரு அபாரமான கோலடித்தார். லியோனல் மெஸ்ஸி தனி மனிதராக பந்தை விரட்டிக் கொண்டு கோல் கம்பத்தை நோக்கி விரைந்தார். அவரைத் தடுக்க தென் கொரிய வீரர்கள் இருவர் முயல, அவர்களை ஏமாற்றி பந்தை அடித்தார் மெஸ்ஸி. அது சற்று விலகிச் சென்றது. ஆனால் சரியான சமயத்தில் அங்கு பாய்ந்த ஹிஹுயன் அழகான கோலாக்கி அர்ஜென்டினாவுக்கு வலுவான நிலையை ஏற்படுத்தினார்.

அடுத்து 80வது நிமிடத்தில் மீண்டும் ஹிஹுயன் அபாரமான கோலடித்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்தார் ஹிஹுயன்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் அடிக்கப்பட்ட 48வது ஹாட்ரிக் ஆகும் இது. மேலும் ஹாட்ரிக் அடித்த 3வது அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையும் ஹிஹுயனுக்குக் கிடைத்தது.

இதற்கு முன்பு குலிமோ ஸ்டேபிள், காப்ரியல் பாடிஸ்டுடா ஆகியோர் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய போட்டியின் நாயகனாக ஹிஹுயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+