இக்கட்டான நிலையில் நைஜீரியா-கிரீஸ்

இந்தப் போட்டியில் வெல்லும் அணியே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவது குறித்து யோசிக்க முடியும் என்பதால் இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக மாறியுள்ளது.
இரு அணிகளுமே தங்களது முதல் போட்டிகளில் தோல்வியைத்தழுவியுள்ளன. அர்ஜென்டினாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியா தோற்றது. தென் கொரியாவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் கிரீஸ் தோற்றது.
எனவே இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே இரு அணிகளுக்கும் இந்த உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைக்கும்.
இரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆளுக்கு ஒரு போட்டியை வென்றுள்ளன. எனவே இரு அணிகளும் கிட்டத்தட்ட சம நிலையிலேயே உள்ளன. எனவே இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications