உருகுவேயின் ஃபோர்லான் அபார ஆட்டம்-தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் தோல்வி

ஃபோர்லான் மட்டும் 2 கோல்களைப் போட்டார். 3வது கோலை ஆட்டத்தின் கடைசி விநாடிகளில் ஆல்வரோ பெரைரா அடித்தார்.
ஆட்டத்தின் 24வது நிமிடத்தின்போது 25 மீ்ட்டர் தூரத்திலிருந்து ஃபோர்லான் அடித்த பந்து, அட்டகாசமான கோலானது. மிகவும் திறமையாக அவர் அடித்த கோலால், உருகுவே ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.
அடுத்து ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு உருகுவேக்குக் கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி அடுத்த கோலையும் அடித்தார் ஃபோர்லான்.
பின்னர் 90'+5வது நி்மிடத்தில் பெரைரா ஒருகோலடித்து தென் ஆப்பிரிக்காவின் கதையை முழுமையாக முடித்து வைத்தார்.
இரண்டு முறை உலக சாம்பியனாக இருந்த அணி உருகுவே என்பதை இந்த ஆட்டம் ஆணித்தரமாக நிரூபித்தது. மேலும், பிரேசில், ஸ்பெயின் போன்ற தடுமாறிக் கொண்டிருக்கும் ஜாம்பவான்களுக்கும் உருகுவேயின் அட்டகாசமான ஆட்டம் நல்ல பாடமாக அமைந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications