புளோம்பான்டைன்: உலகக் கோப்பைப் போட்டிகளில் தனது முதல் வெற்றியை நேற்று கிரீஸ் பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்தது.
புளோம்பான்டைனில் நடைபெற்ற இந்தப் போட்டி படு விறுவிறுப்பாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை கிரீஸ் அதிகரித்துக் கொண்டுள்ளது.
சூப்பர் ஈகிள்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் நைஜீரிய அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என்ற நிலையில்தான் இருந்தது. ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே அந்த அணியின் கலு உசே ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அணியின் சனி கைதா ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதால் நைஜீரியா அதிர்ச்சி அடைந்தது.
இந்த வெளியேற்றத்தை, நைஜீரிய குழப்பத்தையும் கிரீஸ் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முழு வேகத்தைக் காட்டி ஆடியது.
முதல் பாதி ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தநிலையில் 44வது நிமிடத்தில், கிரீஸ் வீரர் கான்ஸ்டான்டினோஸ் காட்சோரனிஸ் அபாரமான கோலை அடித்து சம நிலையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே முழு வேகத்தைக் காட்டின. இரு அணிகளும் மாறி மாறி கோலடிக்கும் முயற்சியில் குதிக்க இரு அணிகளின் கோல் கீப்பர்களும் கடுமையாக முயன்று அவற்றை தடுத்தனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.
இந்த நிலையில் 71வது நி்மிடத்தில், கிரீஸுக்கு இன்னொரு வாய்ரப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வசிலியஸ் டோரோசிடிஸ் அபாரமான கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார்.
இறுதியில் மேலும் கோல் ஏதும் விழாததால் கிரீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி கிரீஸுக்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் கிடைத்த முதல் வெற்றியாகும்.
இதுவரை வெற்றியே பெறாமல் உள்ள நைஜீரியா அடுத்த தனது கடைசி சுற்றுப் போட்டியில் தென் கொரியாவுடன் மோதவுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]