ஆஸ்திரேலியா, கானா ஆட்டம் டிரா!

நேற்று நடந்த டி பிரிவு ஆட்டமான இதில், இரு அணிகளும் கடுமையாக மோதின. இந்த மோதலின்போது முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் ஹேரி கேவல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
ஆட்டம் தொடங்கிய 11 நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிரட் ஹால்மேன் அழகான கோலடித்து முன்னிலை தேடிக்கொடுத்தார். ஆனால் 25வது நிமிடத்தின்போது கானா வீரர் அசமோவா கியான் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்து சம நிலையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் இரு அணிகளும்கோலடிக்கவில்லை.
இறுதிவரை போராடியும் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாததால் போட்டி டிராவில் முடிந்தது.
டி குரூப்பில் தற்போது கானா 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஜெர்மனியும், 3வது இடத்தில், செர்பியாவும், 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடியாக வேண்டிய நிலையில் உள்ளது.
தனது முதல் போட்டியில் ஜெர்மனியிடம் 0-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தது. 2வது போட்டியில் நேற்று டிரா செய்தது. எனவே அடுத்த போட்டியில் அது கண்டிப்பாக ஜெயித்தே ஆக வேண்டும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications