டென்மார்க்குடன் நடந்த போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றதால் காமரூன் அணி உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறுகிறது.
நேற்று நடந்த போட்டியில் காமரூன் அணி நன்றாகவே ஆடியது. ஆனால் டென்மார்க் வீரர்கள், காமரூனை அவுட்கிளாஸ் கடைசி நேரத்தில் அவுட்கிளாஸ் செய்து விட்டனர்.
காமரூன் அணியின் சூப்பர்ஸ்டாரான சாமுவேல் எட்டோ தனது அணிக்காக ஒரு கோலடித்துக் கொடுத்தார். ஆனால் அதை அந்த அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன் காரணமாக டென்மார்க் அணி அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டு வெற்றி பெற்று விட்டது.
காமரூன் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் தோற்றிருந்தது. 2வது போட்டியிலும் அது தோற்று விட்டதால் இனி அது அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற வழியில்லாமல் போய் விட்டது. எனவே உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து அது வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
காமரூன் இடம் பெற்றுள்ள இ பிரிவில், நெதர்லாந்து அணி நல்ல வலுவான நிலையில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு அது இடம் பெறுவது உறுதி. அடுத்த இடத்தில் ஜப்பான் உள்ளது. இந்த அணிக்கும் ஜப்பானுக்கும்தான் போட்டி நிலவுகிறது. இதில் யார் அடுத்த சுற்றுக்கு இடம் பெறப் போவது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]