ஜப்பானை 'சவட்டியது' நெதர்லாந்து-ரவுண்ட் 16க்கும் தகுதி பெறுகிறது

நேற்று டர்பனில் நடந்த போட்டியில் ஜப்பானை அபாரமாக ஆடி வென்றது நெதர்லாந்து. 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. போட்டியின் முக்கால்வாசி நேரம் நெதர்லாந்து வசமே பந்து இருந்ததால், ஜப்பான் திணறிப் போனது.
இது நெதர்லாந்துக்குக் கிடைத்துள்ள 2வது தொடர் வெற்றியாகும். இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புளை பிரகாசமாக்கியுள்ளது நெதர்லாந்து.
போட்டியின் 53வது நிமிடத்தில் ஸ்னீடர் போட்ட அபாரமான கோலால் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி கடுமையானதாக இருந்தாலும் கூட நெதர்லாந்து, ஜப்பானின் தடுப்புகளைத் தாண்டி அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து சாதனை ஒன்றையும் படைத்தது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் தொடர்ந்து 10வது வெற்றியைப் பெற்றதே அந்த சாதனையாகும்.
மேலும், எந்த ஒரு ஆசிய அணியிடமும் இதுவரை தோற்றதில்லை என்ற சாதனையையும் நெதர்லாந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications