இத்தாலியை ஓட ஓட விரட்டுவோம்-நியூசிலாந்து வீரர்கள் சவால்

நடப்புச் சாம்பியனான இத்தாலி ஆரம்பம் முதலே தடுமாறிக் கொண்டிருக்கிறது. தனது முதல் போட்டியில் அது பராகுவேயுடன் மோதியது. ஆனால் போட்டி டிராவில் முடிந்து இத்தாலிக்கு அவமானத்தை தந்து விட்டது.
இன்றைய போட்டியில் அது வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. இல்லாவிட்டால் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்புள் கேள்விக்குறியாகி விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில், நியூசிலாந்தை சந்திக்க வேண்டிய நிலையி் இத்தாலி உள்ளது. அந்த அணியின் ஸ்டார் வீரர்களான ரோரி பாலன், ஜார்ஜியோ செல்லினி, பெடரிகோ மார்செட்டி ஆகியோர் அணியின் கோல் சவாலை தலைமையேற்று நடத்த உள்ளனர்.
இப்படி இத்தாலி ஒருபக்கம் கவலையில் இருக்க மறுபக்கம், இத்தாலியை விட 73 ரேங்க் கீழே உள்ள நியூசிலாந்து படு தெம்பாக காணப்படுகிறது. இத்தாலியை வெல்லாமல் விட மாட்டோம் என அந்த அணி படு பகிரங்கமாக உறுமுகிறது. நிச்சயம் இன்றைய போட்டி எங்களுக்குத்தான். இத்தாலியை கடுமையாக தோற்கடிப்போம் என அந்த அணி சவால் விட்டுள்ளது. ஓடஓட விரட்டப் போகிறோம் பாருங்கள் என்று கூறுகிறது நியூசிலாந்து.
இன்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கிறிஸ் கில்லனுக்கும், இத்தாலியின் மார்செட்டிக்கும் இடையே கடும் மோதல் நடக்கலாம். நியூசிலாந்து தனது முதல் போட்டியில் ஸ்லோவேகியாவுடன் மோதி டிரா கண்டது. எனவே இந்தப் போட்டி அந்த அணிக்கும் முக்கியமானது.
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications