ஸ்லோவேகியாவுடன் இன்று பராகுவே மோதல்-வென்றால் 'நாக் அவுட்' உறுதி

எப் குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் பராகுவேயும், ஸ்லோவேகியாவும். இந்த குரூப்பில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளுமே தலா ஒரு டிராவுடன் தலா ஒரு புள்ளியுடன் சம நிலையில் உள்ளன. இதனால் எந்த இரண்டு அணிகள் நாக் அவுட் பிரிவுக்கு தகுதி பெறப் போகின்றன என்பதில் பெரும் இழுபறி நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று நான்கு அணிகளுமே மோதிப் பார்க்கவுள்ளன. பராகுவே ஸ்லோவேகியாவை சந்திக்கிறது. நியூசிலாந்து, இத்தாலியுடன் மோதுகிறது.
பராகுவே அணி தனது முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இத்தாலியுடன் டிரா செய்து இத்தாலிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அணியாகும். இந்தநிலையில் ஸ்லோவேகியாவை எப்படியாவது இன்று வீழ்த்தி விட அது தயாராகி வருகிறது. அப்படி நடந்தால், பராகுவே நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக ஸ்லோவேகியா வென்று விட்டால், அதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விடும்.
ஸ்லோவேகியாவின் விட்டக் இன்றைய முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார் என நம்பலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications