கால்பந்து போட்டிகளை காண முடியாமல் விளையாட்டு ரசிகர்கள் ஏமாற்றம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு கோடிக் கணக்கான மக்கள் கண்டு மகிழும் போட்டி உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்றால் அது மிகையாகாது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜூன் 11 அன்று துவங்கி நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு உலக அளவில் மிக அதிகமான ரசிகர்கள் உண்டு.
கால்பந்து திருவிழா போட்டிகள் அனைத்தும் இ.எஸ்.பி.என் டிவி சானலில், நேரடியாக ஒளிபரப்பப்பாகி வருகின்றது. ஆனால் இந்த டிவி கட்டண சேனல் என்பதால், இவற்றை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் டிவி மூலம் காண இயலாத நிலை உள்ளது.
திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாநகரங்களில் பல்வேறு இடங்களில் இஎஸ்பிஎன் தொலைக்காட்சி தெரியவில்லை என ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால், உலக கால்பந்து திருவிழா போட்டிகளை இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் கண்டு மகிழ முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதேசமயம், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இஎஸ்பிஎன் சானைல தற்காலிகமாக ஒளிபரப்பி வருகின்றனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications