Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேமரூனை அட்டகாசமாய் வீழ்த்திய குரோஷியா – 4-0 கோல் கணக்கில் அபார வெற்றி

ரியோ டி ஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கேமரூனை, குரோஷியா அணி வீழ்த்தியது.

இன்று நடைபெற்ற "ஏ" பிரிவு ஆட்டத்தில், குரோஷியா அணி கேமரூனை எதிர் கொண்டது.

அதில் நான்கிற்கு ஜீரோ என்ற கோல்கணக்கில் கேமரூனை வீழ்த்தி குரோஷியா அணை வெற்றி பெற்றுள்ளது.

அடித்து நொறுக்கிய வீரர்கள்:

அடித்து நொறுக்கிய வீரர்கள்:

தொடக்கம் முதலே சூடுபிடித்த இந்த ஆட்டத்தில் கேமரூன் அணியை தங்கள் அதிரடி ஆட்டத்தால் குரோஷியா வீரர்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். கேமரூனுக்கு எதிராக படபடவென்று கோல்களாக அடித்துத் தள்ளினர் குரோஷியா வீரர்கள்.

தத்தளித்த கேமரூன் அணி:

தத்தளித்த கேமரூன் அணி:

எவ்வளவே பிரயத்தனப் பட்டு போராடியும், கேமரூன் வீரர்களால் குரோஷியாவை எதிர்த்தி நிற்க இயலவில்லை. குரோஷியாவின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க இயலாத கேமரூனால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை.

அலெக்சாண்டர் சாங் வெளியேற்றம்:

அலெக்சாண்டர் சாங் வெளியேற்றம்:

இந்நிலையில் முரட்டுத் தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கேமரூன் அணி வீரர் அலெக்சாண்டர் சாங் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடும் போட்டி:

கடும் போட்டி:

ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் பந்தை கைப்பற்றுவதில் கேமரூனின் அலெக்சாண்டர் சாங், குரோஷியாவின் மண்ட்சுகிச் ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

ஓங்கி குத்திய சாங்:

ஓங்கி குத்திய சாங்:

அப்போது பந்து கிடைக்காததால் ஆத்திரமடைந்த சாங், மண்ட்சுகிச்சின் முதுகில் குத்தினார். இதையடுத்து சாங்கிற்கு சிவப்பு அட்டை காட்டி அவரை போட்டியிலிருந்து நடுவர் வெளியேற்றினார்.இதுவும் கேமரூன் அணிக்கு பலத்த அடியாக அமைந்தது.

நான்கு கோல்களுடன் வெற்றி:

நான்கு கோல்களுடன் வெற்றி:

ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையில் தனது நான்காவது கோலை பதிவு செய்த குரோஷியா அணி, 4-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தி வெற்றிக்கனியைப் பறித்தது.

Story first published: Thursday, June 19, 2014, 9:19 [IST]
Other articles published on Jun 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+