For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திக்கி முக்கி கோல் போட்டு நைஜீரியாவை வென்ற பிரான்ஸ்

By Siva

ரியோடி ஜெனீரோ: ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் நாக்அவுட் சுற்று நடைபெற்று வருகின்றது. திங்கட்கிழமை இரவு பிரான்ஸ், நைஜீரியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பிரான்ஸ், நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அதன் விவரத்தை பார்ப்போம்:

முதல் பாதி

முதல் பாதி

ஆட்டம் துவங்கியதில் இருந்தே பிரான்ஸ் அணி வீரர்கள் திணறிக் கொண்டிருந்தனர். சரி இன்னும் சிறிது நேரத்தில் பிரான்ஸ் தெம்பாக விளையாடும் என்று பார்த்தால் அப்படியும் சொதப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலைமை ஆட்டத்தின் முதல் பாதி வரை நீடித்தது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தான் பிரான்ஸ் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தத் துவங்கினர். பிரான்ஸ் வீரர் பால் போக்பா சூப்பராக ஒரு கோல் அடித்து நைஜீரிய வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

யோபோ

யோபோ

பிரான்ஸ் ஒரு கோல் அடித்திருந்த நிலையில் அந்நாட்டு வீரர் மேத்யூ வால்பியூனா கோல் அடிக்க முயற்சி செய்ய பந்தை தடுக்க கோல் போஸ்டில் நின்ற நைஜீரிய வீரர் ஜோசப் யோபாவின் காலில் பந்து பட்டு அது கோல் ஆகிவிட்டது. இதையடுத்து பிரான்ஸ் வெற்றி பெற்று நைஜீரியாவை உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியே அனுப்பியது.

ஜெர்மனி

ஜெர்மனி

காலிறுதி போட்டியில் பிரான்ஸ் ஜெர்மனியை சந்திக்க உள்ளது. நாக்அவுட் சுற்றில் ஜெர்மனி அல்ஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 1, 2014, 9:54 [IST]
Other articles published on Jul 1, 2014
English summary
France beats Nigeria by 2-0 in the knock out round and got qualified for the quarter finals of the Fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+