Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிஃபா உலககோப்பை 2022 -அரையிறுதியில் மோத போகும் அணிகள் எது? அட்டவணை இதோ- மறுபடியும் முதலில் இருந்தா?

தோஹா : 2022 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் 32 அணிகள் மோதின.

இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கத்தாரில் இந்தப் போட்டியை கண்டு களித்தனர். தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற பலமான அணிகள் முதல் சுற்றிலேயே தொடரை விட்டு விலகிய நிலையில், தென் கொரியா,ஜப்பான், மொராகோ போன்ற அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது.

8 அணிகள்

8 அணிகள்

இதில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி மொராகோ அதிர்ச்சி அளித்தது. இந்த சுற்றிலிருந்து காலிறுதிக்கு பிரேசில், அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, மொராகோ, நெதர்லாந்து, போர்ச்சுக்கல் , குரோஷியா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றன.

அதிர்ச்சி தோல்விகள்

அதிர்ச்சி தோல்விகள்

இந்த நிலையில், காலிறுதி ஆட்டம் பரபரப்புக்கும் , விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாமல் நடந்து முடிந்துவிட்டது. இம்முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணியை குரோஷியா பெனால்டி சூட் அவுட் முறையில் வீழத்தியது. இதே போன்று ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியை ஆப்பிரிக்க அணியான மொராகோ வீழ்த்தியது.

முதல் அரையிறுதி

முதல் அரையிறுதி

இதே போன்று நெதர்லாந்தை பெனால்டி சூட் அவுட் முறையில் அர்ஜென்டினாவும் இங்கிலாந்து அணியை பிரான்சும் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அரையிறுதி சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் வரும் 14ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு அர்ஜென்டினாவும், குரோஷியாவும் மோதுகிறது.

இரண்டாவது அரையிறுதி

இரண்டாவது அரையிறுதி

இதனைத் தொடர்ந்து வரும் 15ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு பிரான்சும், மொராகோ அணிகளும் மோதுகின்றன. இந்த நிலையில், கடந்த முறை உலககோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும், குரோஷிய அணியும் மோதின. தற்போது, அதே போல், இம்முறையும் இதே அணிகள் மோத வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி 18ஆம் தேதி 8.30 மணிக்கு நடைபெறும்.

Story first published: Sunday, December 11, 2022, 18:04 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+