Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மணி.. கோல் அடிங்க மணி ! 16 ஆண்டுகளுக்கு பிறகு குரோஷியாவுக்கு ஏமாற்றம். மொராகோ அபாரம்

தோஹா : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா, மொராகோ அணிகள் மோதிய ஆட்டம், டிராவில் முடிவடைந்தது.

கடந்த முறை உலககோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை குரோஷிய அணி சென்று, பிரான்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

இதனால் குரோஷிய அணி மீதான எதிர்பார்ப்பு இன்றைய ஆட்டத்தில், பல மடங்கு அதிகரித்தது. எனினும், எப்படி நடிகர் பிரபு பொன்னியன் செல்வன் படத்தில் மணி.. பசிக்கிது மணி என்று சொன்னாரோ, அதே பொல் ரசிகர்களும் மணி தூக்கம் வருது, மணி கோல் அடிங்க என்று புலம்ப தொடங்கிவிட்டனர்.

மிஸ்சான கோல்

மிஸ்சான கோல்

ஆனால், இன்றைய ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பாகவே அமைந்திருக்கும். ஆனால் புதியதாக பார்க்கும் ரசிகர்களுக்கு, என்ன பா கோல் அடிப்பாங்கனு சொன்னீங்க, ஒன்றையுமே காணும் என்று நிச்சயம் கேட்டு இருப்பார்கள். ஆட்டத்தின் முதல் பாதி இறுதியில், நிக்லோஸ் விளாசிக் அடித்த கோல் வாய்ப்பு ஐஸ்ட் மிஸ் ஆனது.

வாய்ப்பு வீண்

வாய்ப்பு வீண்

அதே போன்று மொராகோ வீரரும் நவ்சையிரும் தலையில் பந்தை தடுத்தார். குரோஷிய அணியின் கேப்டன் மொட்ரிச் இன்று தனது இடத்தையும் தாண்டி அனைத்து நிலையிலும் விளையாடி, எப்படியாவது கோல் அடிக்க முடியாதா என்று கடுமையாக போராடினார். எனினும் இரண்டு அணியின் தடுப்பாட்டமும் பலமாக இருந்ததால், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

கடும் முயற்சி

கடும் முயற்சி

என்ன காரணமோ தெரியவில்லை. இரு அணி வீரர்களுக்கும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் கோல் போஸ்ட்டிற்குள் அடிக்காமல் மற்ற அனைத்து இடத்திலும் அடித்து வீணடித்தனர். மொராகோ வீரரும் செல்ஸி நட்சத்திரமான ஹக்கிம், தம்மால் முடிந்த வரை பந்தை கடத்தி கொண்டு வந்தார். எனினும் அது கோலாக மாறவில்லை

கோல் பயணம் நிறைவு

கோல் பயணம் நிறைவு

அதே போன்று ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ஜாஸ்கோ அடித்த பந்து , கோல் போஸ்டை மிஸ் செய்தது. இந்த நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்திலும் இரு அணியால் கோல் அடிக்கவில்லை. இதனால், இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஸ்கோர் 0க்கு0 என்று ஆனது. இதனிடையே உலககோப்பை தொடரில் குரோஷிய அணி கடைசியாக விளையாடிய 11 போட்டியில் ஒரு கோலாவது அடித்திருக்கும். தற்போது அந்த பயணம் முடிவுக்கு வந்தது.

Story first published: Wednesday, November 23, 2022, 18:41 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+