For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிஃபா உலககோப்பை தொடக்க விழா.. இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தி.. காலை வாரிய ஜியோ

தோஹா : 2022 ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக தொடங்கியது. உலகத்திலேயே அதிக மக்களால் பார்க்க கூடிய விளையாட்டு தொடர் என்றால் அது இது தான்.

இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியை காண இருந்தனர். ஆனால் இந்தியர்கள் வழக்கம் போல் பார்க்கும் தொலைக்காட்சி சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி நெட்வொர்க் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் என எதிலும் போட்டி ஒளிபரப்பு ஆகவில்லை.

ஆனால், அது குறித்து நாம் காலையிலேயே செய்தி வெளியிட்டு இருந்தோம். ஸ்போர்ட்ஸ் 18 என்ற புதிய சேனல் தான் இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது என்பதை சுட்டிக்காட்டு இருந்தோம்.

சொந்த பயிற்சியாளர் மகளுடன் காதல்.. ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா? ஸ்பெயின் வீரர் அளித்த 'நச்' பதில்! சொந்த பயிற்சியாளர் மகளுடன் காதல்.. ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா? ஸ்பெயின் வீரர் அளித்த 'நச்' பதில்!

ஜியோ சினிமா

ஜியோ சினிமா

சரி, இப்போது தான் யார் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள், இணையத்தளத்தில் எந்த ஓடிடி ஆப் என்று தேடிய ரசிகர்களுக்கு தான் அதிர்ச்சி காத்து இருந்தது. டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற எந்த முன்னணி ஓடிடி தளத்திலும் நேரலை இல்லை. ஜியோ சினிமா என்ற தளத்தில் தான் போட்டி ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்தும் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சியை காண இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், ஜியோ சினிமா என்ற ஆப் சரியாக இயங்கவில்லை. சரி நமது இண்டர்நேட்டில் தான் பிரச்சினை என்று பார்த்தால், மற்ற தளங்கள் எல்லாம் சரியாக செயல்பட்டது. அப்போது தான் தெரிந்தது ஜியோ சினிமா ஆப்பில் தான் சிக்கலே என்று.

டிரெண்டிங்

டிரெண்டிங்

ஒரு நிகழ்ச்சியை கூட நேரலையில் தெளிவாக தெரியவில்லை, 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ சுற்றும் அல்லவா, அது போன்று தான் ரசிகர்களுக்கு தொடக்க விழா நிகழ்ச்சியை காண நேர்ந்தது, இதனையடுத்து ஜியோ சினிமா மீது புகார்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட தொடங்கினர். இதனால் ஜியோ சினிமா தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆனது.

ரசிகர்கள் புகார்

ரசிகர்கள் புகார்

உலகமே எதிர்பார்த்த ஒரு போட்டியை பார்க்க முடியாத படி, ஜியோ செய்துவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டினர். ஜியோ சினிமா ஆப், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை தங்கு தடையின்றி ஒளிபரப்புவதற்கான வசதியை இல்லாமலேயே, ரசிகர்களை வெறுப்பேற்றிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, November 20, 2022, 22:16 [IST]
Other articles published on Nov 20, 2022
English summary
2022 FIFA world cup opening ceremony telecast issue in india ஃபிஃபா உலககோப்பை தொடக்க விழா.. இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தி.. ஜியோ சினிமா மீது கடும் தாக்கு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X