ஃபிஃபா உலககோப்பை - கண்ணீர் கடலில் மெஸ்ஸி ரசிகர்கள்.. அர்ஜென்டினா அணியை புரட்டி எடுத்த சவுதி அரேபியா
தோஹா : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் பெரிய அதிர்ச்சிகரமாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கட்ட அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவிடம் தோல்வியை தழுவியது.
தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணி , 51வது இடத்தில் உள்ள சவுதி அரேபிய அணியும் மோதின. இதில் சவுதி அரேபியா இப்படி மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என்று யாராவது சொன்னால்,கனவிலும் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.
கத்தாரில் நடைபெற்ற குரூப் சி லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து அர்ஜென்டினாவின் கையே ஓங்கி இருந்தது.

மெஸ்ஸி கோல்
சவுதி அரேபியாவின் அனுமதியின்மை தெளிவாக அட்டத்தில் தெரிந்தது. அந்த நிலையில் போட்டியின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதனையடுத்து, அர்ஜென்டினா வீரர்கள் போட்டியில் கொஞ்சம் அசால்டாக எதிர்கொள்ள தொடங்கிவிட்டனர்.

ஆப் சைடு கோல்
ஆட்டத்தின் 21 மற்றும் 22, 24 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி தங்களது கவன குறைவால் ஆப் சைடில் நின்றதால் கோல் அடிக்கும் வாய்ப்பு பறிப் போனது. இதனையடுத்து ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அர்ஜென்டினா வீரர் மார்டினிஸ் கோல் அடிக்க, அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அதனை ஆஃப் சைடு என்று அறிவித்து, நடுவர் கோலை ரத்து செய்தார். இது அர்ஜென்டினாவுக்கு இடியாக வந்து இறங்கியது.

சவுதி அபாரம்
இந்த நிலையில், போட்டியின் 48வது நிமிடத்தில் சவுதி வீரர் சாலே அல் செரி, அபாரமாக கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற, அர்ஜென்டினாவின் கோலை சவுதி சமன் செய்தது. இதனால் அர்ஜென்டினா வீரர்கள் நிலைக்குலைந்து போனார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் சவுதி வீரர் சலீம் 2வது கோல் அடித்தார்.

அர்ஜென்டினா அதிர்ச்சி
இதனையடுத்து, சவுதி கோலை சமன் செய்ய அர்ஜென்டினா வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. அர்ஜென்டினா வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை பதற்றத்தின் காரணமாக பலமுறை தவறவிட்டனர். போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும், மெஸ்ஸியின் மேஜிக் பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து, சவுதி அரேபியா 2க்கு1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. இதே போன்று 1990 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரின் போது முதல் ஆட்டத்தில் கேம்ரூன் அணியிடம் அர்ஜென்டினா தோற்றது. எனினும் அதன் பிறகு இறுதிப் போட்டி வரை சென்றது. எனவே மெஸ்ஸி ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.


Click it and Unblock the Notifications